பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த கூடாது: அரசியல் தலைவர்கள் கோரிக்கை

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் உள்ள பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுப்பட தடை விதிக்க வேண்டும் என அந்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நேற்று சுமார் 100 பேர் அடங்கிய அரசியல் தலைவர்கள் குழு இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தினமன்று இஸ்லாமியர்கள் வீதிகள் அமர்ந்து தொழுகையில் ஈடுப்பட தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட அரசியல் தலைவர்கள் பேசியபோது, ‘பிரான்ஸ் போன்ற மதசார்ப்பற்ற நாட்டில் வீதிகளில் இஸ்லாமியர்களை தொழுகை நடத்த அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பிரான்ஸ் குடிமக்களுக்கு இருப்பது போன்ற சம உரிமைகள் இஸ்லாமியர்களுக்கும் உள்ளது.

ஆனால், பொது இடங்கள் இஸ்லாமியர்களின் தொழுகைக்காக பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.

அரசியல் தலைவர்களின் போராட்டம் குறித்து இஸ்லாமியர்கள் சிலர் பேசியபோது, ‘ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வீதிகளில் அமர்ந்து தொழுகையில் ஈடுப்பட எங்களுக்கும் விருப்பம் இல்லை.

ஆனால், நாங்கள் ஏற்கனவே தொழுகை நடத்தி வந்த டவுன் ஹால் அறை திரும்ப பெறப்பட்டுள்ளதால் வேறு இடம் இல்லாமல் வீதிகளில் தொழுகை நடத்தி வருகிறோம்.

இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த பிரத்யேகமான இடத்தை அரசாங்கம் ஏற்பாடு செய்தால் வீதிகளில் அமர்ந்து தொழுகை நடத்த மாட்டோம் என பதிலளித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers