பிரான்சில் பிறந்தால் இத்தனை ஆண்டுகள் உயிர் வாழலாம்

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரான்ஸ் நாட்டில் நீண்ட காலம் வாழலாம், ஆனால் அது ஆரோக்கியமான வாழ்க்கையாக வாழ முடியாது என 2017 ஆண்டிற்கான மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

OECD (Organisation for Economic Co-operation and Development) என்ற அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வளர்ச்சி மிகுந்த 35 நாடுகளில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.

இதில், சராசரி ஆயுட்காலமான 80.6 ஆண்டுகளை விட பிரான்சில் தற்போது பிறந்தவர்கள் 82.4 ஆண்டுகள் வாழலாம் என தெரியவந்துள்ளது.

ஜப்பான் நாட்டு மக்கள் தான் அதிக ஆண்டுகள் வாழலாம் என தெரியவந்துள்ளது. ஜப்பான் நாட்டு மக்கள் 83.9 ஆண்டுகள், ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரு நாடுளிலும் 83 ஆண்டுகள் வரை வாழலாம்.

இந்த ஆய்வில், மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் நாடுகளில் குறைந்த விகித இறப்பு பிரான்ஸ் நாட்டில் ஏற்படுகிறது.

இருப்பினும் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு ஆயுட்காலம் அதிகமாக இருந்தபோதிலும் அவர்கள் ஆரோக்கியத்தில் பின்தங்கியிருக்கிறார்கள். dementia, Alzheimer's ஆகிய நோய்களின் பாதிப்பு சராசரியை விட அதிகமாக உள்ளது.

1000 நபர்களில் 20 பேருக்கு dementia நோய் ஏற்பட்டுள்ளது. பிரான்சில் சராசரியாக அதிக எடை மற்றும் பருமனான மக்கள் விகிதம் அதிகரித்துள்ளது. 49 சதவிகிதம் பேர் இந்த உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போன்று பிரான்ஸ் மக்கள் மாசுபாட்டாலு அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி, இந்த ஆய்வில் கலந்துகொண்ட நாடுகளிலேயே சராசரியை விட ஆல்கஹால் மற்றும் புகையிலையை பிரான்ஸ் நாட்டு மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் 11.9 லிட்டர் ஆல்கஹால் குடிக்கிறார்கள். 22.4 சதவீதம் பேர் புகைப்பிடிக்கிறார்கள், பிற வளர்ச்சியுற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், பிரான்சில் 50 சதவிகிதம் கூடுதலாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இருப்பதாக இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers