காதலனை சந்திக்க கடத்தல் நாடகம் நடத்திய காதலி: நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் காதலனை சந்திக்க கடத்தல் நாடகம் நடித்து பொலிசாரின் நேரத்தை வீணடித்த காதலிக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Sandy Gaillard(25) என்பவர் கணவரை பிரிந்து மற்றொரு நபருடன் தனியாக வசித்து வருகிறார்.

எனினும், மூன்றாவதாக நபர் ஒருவருடன் தொடர்பு வைத்துள்ள அப்பெண் அவரை அடிக்கடி ரகசியமாக சந்தித்து வந்துள்ளார்.

கடந்த யூலை மாதம் அன்று காதலனுடன் வெளியே செல்ல காதலி திட்டமிட்டுள்ளார். ஆனால், காதலனால் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்துக்கொண்ட காதலி அவருக்கு அவசர குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் ‘நான் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளேன். தற்போது கருப்பு நிறக்கார் ஒன்றில் தன்னை அடைத்து வைத்துள்ளனர்’ என காதலி தெரிவித்துள்ளார்.

காதலியின் தகவலால் அதிர்ச்சி அடைந்த காதலன் உடனடியாக பொலிசாருக்கு புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்ற பொலிசார் 50 பேர் கொண்ட தனிப்படை ஒன்றை அமைத்து ஹெலிகொப்டர் மூலம் காதலியை தேடியுள்ளனர்.

சுமார் 24 மணி நேர தேடலுக்கு பின்னர் காதலி அவராகவே பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.

’என்னை கடத்திய மர்ம நபர்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்துவிட்டனர்’ எனக் காதலி தெரிவித்துள்ளார்.

ஆனால், கடத்தப்பட்டது தொடர்பான எவ்வித அச்சமும் பரப்பரப்பும் அவரிடம் இல்லாததால் பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

காதலியை மிரட்டி பொலிசார் விசாரணை செய்தபோது காதலனை சந்திப்பதற்காக கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதாக அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், இந்நாடகத்தில் காதலனுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி பொலிசாரின் நேரத்தை வீணடித்த குற்றத்திற்காக காதலிக்கு 6 மாத இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனையும், 5000 யூரோ அபராதமும் நீதிபதி விதித்துள்ளார்.

மேலும், ஒரு சிறந்த மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் எனவும் காதலிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்