சுரங்கப்பாதை படிகட்டுகளில் காரை செலுத்திய பெண்: வேடிக்கையான காரணம்

Report Print Kabilan in பிரான்ஸ்
205Shares

பிரான்ஸில் பெண் ஒருவர், மெட்ரோ ரயில் சுரங்க நடைபாதையை கார் பார்க்கிங் என நினைத்து காரை செலுத்தி மாட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

கடந்த திங்களன்று, பிரான்ஸின் Toulouse நகரில் உள்ள Jeanne-d'Arcக்கின் அடித்தளத்தில் உள்ள கார் பார்க்கிங்கிற்கு செல்ல நினைத்துள்ளார். ஆனால், Jeanne-d'Arc மெட்ரோ ரயில் நிலையத்தின் சுரங்கபாதையும் அதே பெயரில் இருந்ததால், சுரங்கபாதையினுள் தவறுதலாக தனது காரை செலுத்தியுள்ளார்.

மாடிப் படிகட்டுகளில் தனது கார் இறங்கியுள்ளதை உணர்ந்த அவர், அப்படியே காரை நிறுத்திவிட்டார். இதன் மூலம் ஏராளமான கூட்டம் அங்கு கூடியது.

சிசிடிவி மூலம் சாலைகளை கண்காணித்துக் கொண்டிருந்த பொலிசார், சுரங்கபாதையின் நுழைவு வாயிலில் கூட்டம் கூடியிருப்பதை பார்த்து அங்கு விரைந்தனர்.

பின்னர், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் எந்தவித சேதமும் இன்றி கார் வெளியே எடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பொது மக்கள் கூறுகையில், இது போன்ற சம்பவம் பலமுறை நடந்துள்ளது என்றும் சுரங்கபாதையின் பெயரும், கார் பார்க்கிங்கின் பெயரும் ஒரே மாதிரி இருப்பதே இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்