பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்: சிரியாவின் முடிவால் தனிமைப்படும் அமெரிக்கா

Report Print Raju Raju in பிரான்ஸ்
107Shares

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இணைவதற்கு சிரியா தயாராகி வரும் நிலையில் அமெரிக்கா மட்டும் தனிமைப்பட்டு நிற்கிறது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலகநாடுகளை ஒன்றினைக்க போடப்பட்டது தான் பாரீஸ் ஒப்பந்தம்.

முக்கிய நாடுகள் இந்த ஒப்பந்ததில் கையெழுத்திட்ட நிலையில், நிகரகுவா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் மட்டும் கையெழுத்து போடாமல் இருந்தது.

பின்னர், நிகரகுவா அக்டோபர் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனிடையில் கடந்த யூன் மாதம் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கிக்கொள்வதாக தெரிவித்த அமெரிக்கா, அதிலுள்ள விதிப்படி 2020-ஆம் ஆண்டு வரை அவ்வாறு செய்ய முடியாது என கூறுவதால் விலக முடியவில்லை என தெரிவித்தது.

இந்நிலையில், ஜேர்மனியின் பான் நகரில் 196 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற பருவநிலை கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய சிரியாவின் சுற்றுச்சூழல்துறை இணையமைச்சர் வாதாஹ் கட்மவி, பாரிஸ் பருவநிலை மாற்ற இசைவை பொருத்தவரையில், சிரியா அரபு குடியரசின் அர்பணிப்பை நான் உறுதிசெய்ய விரும்புகிறேன்.

இந்த இசைவு காரணமாக முடிந்த வரையில் விரைவாக ஒப்பந்ததில் கையெழுத்திடப்படும் என கூறியுள்ளார்.

இதையடுத்து பாரீஸ் பருவநிலை ஒப்பந்ததில் சிரியா இணைவது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக இதிலிருந்து விலகும் அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சுற்றுசூழல் சார்ந்த பொதுநல அமைப்பான தி சியெர்ரா கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் எல்லா நாடுகளும் ஒன்றிணைந்து பருவநிலை மாற்றம் குறித்த நெருக்கடியை சமாளிக்க முன்னேறி வருகிறது.

ஆனால் டிரம்ப், உலக அரங்கில் தன்னை தனித்துக் கொள்வது என்பது அமெரிக்காவை மிகவும் இக்கட்டான நிலையில் நிறுத்தியுள்ளது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்