தந்தை தூங்கிய நேரத்தில் 1000 யூரோக்களை செலவு செய்த சிறுமி

Report Print Kabilan in பிரான்ஸ்
535Shares

லண்டனில் சிறுமி ஒருவர் பாரீஸ் செல்வதற்காக தனது தந்தையின் கடவுச்சொல்லை பயன்படுத்தி, அதன் மூலமாக ஒரே இரவில் 1000 யூரோக்களை செலவு செய்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்தவர் இயான் வில்சன். இவரது ஒன்பது வயது மகள் சூசன், அவர் தூங்கிய நேரத்தில் அவரது கைப்பேசியை எடுத்துள்ளார். அதன் கடவுச்சொல்லை யூகத்தின் மூலமாக அறிந்து,

சுற்றுலாவிற்கு செல்வதற்கான முன்பதிவுகளை செய்துள்ளார். டிஸ்னிலேண்ட் செல்வதற்கும், பாரீஸில் உள்ள ஈபிள் டவரை காண சிறப்பு விருந்தினர் கட்டணமாக 218 யூரோக்களையும், பின்னர், டிஸ்னிலேண்டில் அதிவிரைவு ரயில் பயணம் மேற்கொள்வதற்காகவும், பொழுதுபோக்கு பூங்காவிற்கு என 391 யூரோக்களையும் கைப்பேசியின் மூலமாக முன்பதிவு கட்டணம் செய்துள்ளார்.

மேலும், தங்களது குடும்பம் செல்ல விமான பயணச்சீட்டையும், தங்குவதற்கு ஒட்டல் அறையையும் சேர்த்து முன்பதிவு செய்துள்ளார் சூசன்.

இதனைத் தொடர்ந்து, மூன்று நாட்கள் கழித்து இயான், தனது வங்கி கணக்கில் இருந்து 1005.92 யூரோக்கள் எடுக்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் தனது மகள் தான் இந்த செலவுகளை செய்துள்ளார் என்பதை அறிந்த அவர், தன் மகள் எப்படி இதனை செய்தார் என தெரியவில்லை என கூறினார்.

ஆனால், இது குறித்து சூசன் கூறுகையில், எனக்கு பாரீஸ் எங்கு உள்ளது என்பதே எனக்கே தெரியாது. ஈபிள் டவர் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், தனது வங்கியை தொடர்பு கொண்ட இயான், இது தெரியாமல் நடந்த தவறு. தனது மகள் விளையாட்டாய் இதனை செய்துவிட்டாள். வங்கியை ஏமாற்றும் எந்த வித உள் நோக்கமும் தங்களுக்கு இல்லை.

எனவே, தனது பணத்தை திரும்ப அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்