பிரான்சில் ஒரு கிராமத்தை சொந்தமாக வாங்க வாய்ப்பு: இவ்வளவு குறைந்த விலையா?

Report Print Raju Raju in பிரான்ஸ்
632Shares

பிரான்ஸில் ஒரு குக்கிராமம் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் வெறும் 350,000 யூரோக்கள் மட்டுமே விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தெற்கு பிரான்ஸில் உள்ள புகழ்பெற்ற கிராண்ட்ஸ் கவுஸ் தேசிய பிராந்திய பூங்காவின் நிலப்பரப்புக்கு உள்ளே குறித்த கிராமம் அமைந்துள்ளது.

இதன் அருகிலேயே Tarn நதியும், உலகின் மிகபெரிய பாலமான Millau viaduct-ம் அமைந்துள்ளது.

இங்கு மொத்தம் நான்கு பண்ணை வீடுகளே உள்ளன. சுற்றி ஆறு ஏக்கர் நிலப்பரப்புடன் இரண்டு பெரிய குடோன்களும் கிராமத்தில் உள்ளது.

அதில் ஒரு வீடு மிகவும் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது. எட்டு படுக்கையறைகள், இரண்டு வரவேற்பு அறைகள், பெரிய சமையலறை போன்ற வசதிகள் இங்கு உள்ளது.

வீட்டை சுற்றி காய்கறி மற்றும் பழத்தோட்டங்களும் உள்ளன.

வீடானது வைன் மதுவகை தயாரிக்க சிறந்த இடமாக கருதப்படுகிறது.

மீதி மூன்று வீடுகளும் பெரிதாக இருந்தாலும் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த பகுதியை €300,000 செலவிட்டு புதுப்பித்தால் வருடத்துக்கு €70,000 லாபம் கிடைக்கும் என தெரிகிறது.

கிராமத்தை வாங்க விரும்புகிறவர்கள் பிரான்ஸின் மிக பிரபலமான Gites a la Francaise ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்