பிரான்ஸ் ஜனாதிபதி மனைவியின் உணவு ரகசியம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரபல சமையல்கலை நிபுணரான Guillaume Gomez(39), இதுவரை நான்கு ஜனாதிபதிகளுக்கு உணவினை சமைத்து கொடுக்கும் பணியினைசெய்துள்ளார்.

பல்வேறு நாட்டின் உணவுகளை சமைப்பதில் கைதேர்ந்த இவர், சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், பிரான்ஸ் ஜனாதிபதிஇமானுவேல் மேக்ரானின் மனைவி பிரிகெட்டியின் உணவு ரகசியம் குறித்து பகிர்ந்துகொண்டார்.

பிரிகெட்டி அவர்கள், தினமும் 10 பழங்கள் மற்றும்காய்கறியினை வழக்கமாக சாப்பிடுவார். இந்த வயதிலும்,அவர் ஒல்லியான உடலமைப்புடன் இருப்பதற்கு அவர்எடுத்துக்கொள்ளும் உணவுகளே காரணம்.

பிரான்ஸ் ஜனாதிபதி எப்போம் தனது பணியில் அதிககவனம் செலுத்துவதால், அவர் அதிக அளவில் சாண்ட்விட்ச் மற்றும் வறுத்த இளைச்சி போன்ற உணவினை விரும்பி சாப்பிடுவார்.

பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையில் உணவுக்கு என்று ஒரு அட்டவணை இருக்கிறது. அதில் பிரெஞ்சு உணவுகள் மட்டுமே இருக்கும்.

இதற்காக காய்கள், பழங்கள், மீன் மற்றும் இறைச்சி போன்றவைகள் பிரான்ஸ் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும். சில காய்கள் மற்று பழங்கள் போன்றவைகளை நாங்கள் சிபாரிசு செய்வோம்

பெரும்பாலும் மாளிகையில் ஆர்கானிக் காய்கள் மற்றும் பழங்களையே பயன்படுத்துவோம். அதிலும் குறிப்பாக ரோஸ்மேரி, லாரியர் போன்ற மூலிகைகள் மாளிகையின் தோட்டத்திலே வளர்க்கப்படுகின்றன.

அடுத்த ஆண்டில் ஆர்கானிக் வகை காய்கறிகள் Elysée மாளிகைகளிலும் Versailles பேலசிலும் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரித்தானிய மகாராணியின்70 ஆம் ஆண்டு மணவிழா கொண்டாட்டத்தில் சமைப்பதற்காக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்