பிரான்சில் சிகரெட் பெட்டியின் விலை உயர்கிறது

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

பிரான்சில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வருகிற 2020ம் ஆண்டுக்குள் 20 சிகரெட்டுகளை உள்ளடக்கிய பெட்டியின் விலை 10 யூரோவாக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இதன்படி நவம்பர் 13ம் திகதி முதல் 6.50 யூரோவாக இருக்கும் பெட்டியின் விலை 7.10 யூரோக்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிடைக்கக்கூடிய வருவாயினை குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

பிரித்தானியாவை விட பிரான்சில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகமாகும், இதில் ஐந்தில் ஒரு இளைஞர் சிகரெட் புகைப்பது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்