பலமடங்கு உயர்ந்த ஈபிள் டவர் பார்வையாளர் கட்டணம்: காரணம் இதுதான்

Report Print Raju Raju in பிரான்ஸ்

ஈபிள் டவர் நினைச்சின்னத்தின் பார்வையாளர் கட்டணம் கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரலாற்று சிறப்புமிக்க ஈபிள் டவர் நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.

இதை பார்வையிடும் பார்வையாளர்களுக்கான கட்டணம் கடந்த 1-ஆம் திகதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

ஈபிள் டவரின் உச்சிக்கு லிப்ட் மூலம் போக €17-ஆக இருந்த கட்டணம் தற்போது €25-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

உச்சியில் அமைந்திருக்கும் Dame de fer (இரும்பு பெண்மணி) இடத்துக்கு போக பழைய கட்டணத்திலிருந்து 47 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே போல, இரண்டாம் தளத்துக்கு லிப்டில் செல்ல இனி €11-க்கு பதில் €16 கட்டணம் செலுத்த வேண்டும்.

நடந்து செல்லும் கட்டணம் €7-லிருந்து €10-ஆக உயர்ந்துள்ளது.

ஈபிள் டவரில் முக்கிய பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவே கட்டண உயர்வு அமுலுக்கு வந்துள்ளது.

இதற்காக அடுத்த 15 ஆண்டுகளில் €300 மில்லியன் பணத்தை செலவழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்