தீவிரவாதியின் சகோதரருக்கு தரப்பட்ட குறைந்த தண்டனை: பாதிக்கப்பட்டோர் அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரான்ஸில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு உதவியாக இருந்த நபருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்துள்ளது பலரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

பிரான்ஸில் கடந்த 2012-ல் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முகமது மெரா என்ற தீவிரவாதி நடத்திய தாக்குதலில் மொத்தம் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதலில் ஈடுபட்ட முகமதை பொலிசார் சுட்டுக்கொன்றனர், தீவிரவாத தாக்குதல் நடத்த முகமதுக்கு உதவியதாக அவரின் சகோதரர் அப்துல்காதரை பொலிசார் கைது செய்தனர்.

முகமது மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முகமதுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிருப்தியை எற்படுத்தியுள்ளது.

தாக்குதலில் உயிரிழந்த இமாத் என்பவரின் தாய் Latifa Ibn Ziaten கூறுகையில், தீர்ப்பானது ஏமாற்றமளிக்கிறது.

எங்கள் குடும்பம் அமைதியான முறையில் பிரான்ஸில் வாழ்ந்து வந்த நிலையில் என் மகன் உயிரிழந்தான்.

முகமதுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என நினைத்த நிலையில் 20 வருட தண்டனை மட்டுமே கிடைத்துள்ளது.

ஏற்கனவே ஐந்து வருடம் கழிந்துவிட்டத்தால் இன்னும் 15 வருடத்தில் அவன் மீண்டும் சாலைக்கு வருவான். அது இளைஞர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

மகன் உயிரிழந்த பின்னர் இளைஞர்களை சந்தித்து தீவிரவாதத்தில் தப்பி தவறி கூட இறங்கிவிட வேண்டம் என Latifa வலியுறுத்தி வருகிறார்.

தாக்குதலில் தனது குடும்பத்தினர் மூவரை பறிகொடுத்த Samuel Sandler கூறுகையில், சிறை தண்டனை முடிவதற்குள் முகமது எல்லாவற்றையும் மறந்துவிடுவார்.

ஆனால் அது குறித்த வலி எங்களுக்கு காலத்துக்கும் இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...