ஓடும் ரயிலின் கூரை மேல் சாகசம்: வாலிபர் பரிதாப மரணம்

Report Print Kabilan in பிரான்ஸ்
302Shares
302Shares
ibctamil.com

பிரான்சின் பாரிஸில் ஓடும் ரயிலின் கூரை மீது பயணித்த இளைஞர் பரிதாபமாக பலியானார்.

உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 7 மணியளவில் Bir-Hakeim ரயில் நிலையத்தின் பாலத்திற்கு அருகே இச்சம்பவம் நடந்துள்ளது.

தனது நண்பர்கள் இருவருடன் ரயில் நிலையம் வந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞரே ரயிலின் கூரை மீது ஏறி பயணித்துள்ளார்.

ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் பாலத்தின் மீது மோதி தண்டவாளத்தில் தூக்கி எறியப்பட்டுள்ளார்.

நேரில் பார்த்த பிரிட்டிஷ் பயணி ஒருவர், குறித்த இளைஞர் ப்ளாட்பாரத்தில் நின்றிருந்தவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே சென்றதாகவுவும், மக்கள் சத்தம் போட்ட சில நிமிடங்களில் பாலத்தில் மோதி தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரது உடல் தண்டவாளத்தில் கிடைக்கப் பெற்ற நிலையில், முதற்கட்ட விசாரணையில் குறித்த இளைஞர் Train Surfing செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததுடன் இளைஞருடன் வந்த நண்பர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்