அகதிகளை தாக்க சதித்திட்டம்: 10 பேர் கைது

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

பிரான்சில் அரசியல்வாதிகள், அரசு தரப்பு பேச்சாளர்களை தாக்க முயன்ற வழக்கில் தீவிர வலதுசாரி அமைப்பை சேர்ந்த 10 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒரு பெண், 9 ஆண்கள் உட்பட இவர்கள் அனைவரும் 17 முதல் 25 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதும் Action Francaise Provence என்ற அமைப்புக்காக இதை செய்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த அமைப்பை சேர்ந்த Logan Alexandre Nisin என்பவர் கடந்த யூன் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், இவருக்கு ஆதரவாகவே தற்போது தாக்குதல் நடத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் மட்டுமின்றி அகதிகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் கைது செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers