பிரான்சில் வீடற்ற நபர்களுக்காக புதுத்திட்டம்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

பிரான்சில் முதன்முறையாக தெருக்களில் வசிக்கும் வீடற்ற நபர்களுக்காக பாதுகாப்பு பெட்டகங்களை வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

வடக்கு பிரான்சில் உள்ள Rouen என்ற நகரிலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் தெருக்களில் பாதுகாப்பு பெட்டகங்கள் வைக்கப்படும் என்றும், இதன்மூலம் வீடற்ற நபர்கள் தங்களது பொருட்களை பாதுகாக்க முடியும் எனவும் துணை நகரத்தலைவரான Caroline Dutartre தெரிவித்துள்ளார்.

மேலும் இத்திட்டம் தெருக்களில் வசிப்பவர்களின் வாழ்வை எளிதாக்கும் என்றும், பல தொண்டு நிறுவனங்களின் ஆதரவும், அங்கீகாரமும் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ள ஆறு இடங்களில் பாதுகாப்பு பெட்டகம் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers