ஈபிள் கோபுரத்தை பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரசியமான தகவல்கள்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

பாரிஸ் என்றதுமே சட்டென நினைவுக்கு வருவது ஈபிள் கோபுரம் தான், ஆனால் இக்கோபுரம் வேறொரு நகரத்துக்காக முதலில் வடிவமைக்கப்பட்டது தெரியுமா?

ஆம் முதன்முதலாக ஸ்பெயினின் பார்சிலோனா நகருக்காக வடிவமைக்கப்பட்ட ஈபிள் கோபுரத்தின் வடிவமைப்பு நிராகரிக்கப்பட்டதால் பாரிசில் நிறுவப்பட்டது.

 • இதனை வடிவமைக்க 1887ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதங்கள் மற்றும் ஐந்து நாட்கள் ஆனது.
 • கட்டிடம் முழுமையடைய ஆனத் தொகை 7,799,401.31 French gold Francsகளாகும், கட்டிடத்தின் மொத்த உயரம் 324 மீற்றர் ஆகும்.(Antenna-யும் சேர்த்து).
 • இதன் உயரம் காலநிலையை பொறுத்து 5.9 இன்ச்கள் வேறுபடக்கூடியது, கோபுர படிகளின் எண்ணிக்கை 1665.
 • இக்கட்டிடத்தை 1909 ஆண்டு இடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், சிறந்த Radio Antenna-வாக செயல்படுவதால் கைவிடப்பட்டதாம்.
 • கடந்த 1891ம் ஆண்டு ஈபிள் கோபுரத்தை விட மேம்பட்ட கட்டிடம் லண்டனில் எழுப்பப்பட்ட போதும், சரியாக கட்டாததால் 1907ம் ஆண்டு இடிக்கப்பட்டது.
 • இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் ஈபிள் டவரை பார்க்க வந்த போது அதன் லிப்ட் கேபிள்கள் துண்டிக்கப்பட்டன, இதனால் ஹிட்லரால் இதன் உச்சியை பார்க்க இயலாமல் போனது.
 • பாராசூட்டை வடிவமைத்தவரான Franz Reichelt பரிசோதனை செய்வதற்காக ஈபிள் கோபுரத்தில் இருந்து குதித்த போது இறந்துவிட்டார்.
 • Victor Lustig என்பவர் ஈபிள் கோபுரத்தை இரும்பு கடை நடத்தி வருபவருக்கு விற்பனை செய்தாராம்.
 • ஈபிள் கோபுரத்தை வடிவமைத்த Gustave Eiffel-க்கு கோபுரத்தின் உயரத்தில் பிரத்யேக குடியிருப்பு உள்ளது, இவரே Liberty's spine வடிவமைப்புக்கும் காரணம்.
 • ஈபிள் கோபுரத்தை வடிவமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், அதுவே உலகின் மிகப்பெரிய கோபுரமாக காணப்பட்டது.
 • கடந்த 1902ம் ஆண்டு மின்னல் தாக்கியதில் ஈபிள் கோபுரத்தின் மேல்பகுதி சேதமடைந்தது.
 • கடந்த 2007ம் ஆண்டு எரிக்கா லா என்ற பெண் ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்து கொண்டார்.
 • கடந்த 2011ம் ஆண்டு உலகிலேயே அதிகளவான மக்களால்(6.98 மில்லியன்) கட்டணம் செலுத்தப்பட்டு பார்க்கப்பட்ட அதிசயம் என்ற பெருமையை பெற்றது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers