குட்டை பாவாடையுடன் பார்வையாளர்களை கவர்ந்த பிரான்ஸ் ஜனாதிபதி மனைவி

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் மனைவி பிரிஜ்ஜிட் நீல நிற ஆடையில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது வைரலாகியுள்ளது.

2024-ல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸின் பாரீஸில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிமுக விழா பாரீஸின் எலிஸே அரண்மனையில் நேற்று நடந்தது.

விழாவில் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அவர் மனைவி பிரிஜ்ஜிட் கலந்து கொண்டனர். முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டேவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மேக்ரான் நீல நிற கோட் சூட் உடையில் வலம் வர, அதற்கு பொருத்தமான நீல நிற ஆடையிலேயே பிரிஜ்ஜிட்டும் அசத்தலாக வலம் வந்தார்.

கால்கள் தெரியும் படியான கவர்ச்சியான குட்டை பாவாடையை பிரிஜ்ஜிட் அணிந்திருந்தார்.

இதோடு நேர்த்தியான தலைமுடி அலங்காரத்தையும் பிரிஜ்ஜிட் செய்திருந்தார்.

அவரின் நேர்த்தியான உடையலங்காரம் பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்தது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers