கஞ்சா பயன்படுத்தினால் சிறை தண்டனையிலிருந்து விலக்கு: வருகிறது சட்டம்

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரான்ஸில் கஞ்சா பயன்படுத்தினால் சிறை தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கக்கூடிய சட்டம் இந்த வருட இறுதிக்குள் அமுலுக்கு வரவுள்ளது.

பிரான்ஸில் கஞ்சா பயன்படுத்தும் நபர்களுக்கு €3,750 வரை அபராதமும், ஒரு வருடம் வரை சிறை தண்டனையும் தற்போது உள்ள சட்டத்தின் படி வழங்கப்படுகிறது.

கடந்தாண்டு மட்டும் 180,000 மக்கள் மீது கஞ்சா சட்டத்தின் விதிமுறை மீறல் வழக்கு பதிவுசெய்யபட்டது.

சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற மேக்ரோன் தனது தேர்தல் அறிக்கையில், தான் ஆட்சிக்கு வந்தால் கஞ்சா உபயோகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என கூறியிருந்தார்.

அதன்படி, கஞ்சா உபயோகப்படுத்தும் நபர்களுக்கான சிறை தண்டனையில் விலக்கு அளிக்கும் சட்டத்தை மேக்ரோன் அரசு கொண்டு வரவுள்ளது.

இதுகுறித்து அரசின் சார்பில் பேசிய Christophe Castaner என்னும் நபர், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தாலும், பிரான்ஸில் கஞ்சா உபயோகப்படுத்துவது குற்றச்செயலாக தான் பாவிக்கப்படும்.

தற்போது உள்ள சட்டத்தால் பொலிசாருக்கு அதிக நேரம் இதுதொடர்பான வழக்கிலேயே செலவாகிறது.

இந்த சட்டம் வருவதால், பொலிசார் முக்கிய வேலைகளில் தங்களை இனி ஈடுபடுத்தி கொள்ளலாம் என கூறியுள்ளார்.

வரவிருக்கும் இந்த புதிய சட்டத்துக்கு காவல்துறை சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஆனாலும், நீதிபதிகள் இந்த சட்டத்துக்கு குறைந்தளவு ஆதரவே அளித்துள்ளார்கள்.

இதனால் எதுவும் மாறப்போவதில்லை என நீதிபதிகள் சங்கத்தை சார்ந்த Virginie என்பவர் கூறியுள்ளார்.

பிரான்ஸில் கடந்த 2014ம் ஆண்டில் நடந்த கருத்துக்கணிப்பில் 17 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கஞ்சா பயன்படுத்தியுள்ளதாகவும், 700,000 பேர் தினமும் கஞ்சா பயன்படுத்துவதாகவும் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments