இத்தாலியில் பிரான்ஸ் புதிய ஜனாதிபதி செய்த செயல்: வைரலாகும் வீடியோ

Report Print Basu in பிரான்ஸ்

இத்தாலியில் இடம்பெற்ற ஜி7 மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், பிரான்சின் முன்னாள் ஜனாதிபதியான ஜாக்குவிஸ் சிராக்-ஐ கிண்டல் செய்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இத்தாலியின் சிசிலி நகரில் இடம்பெற்ற ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனை, டார்மினா தெருவில் கூடியிருந்த மக்கள் வரவேற்றனர். இதன் போது பலர் அவருடன் கைகொடுத்து செல்பி எடுத்துக்கொண்டனர்.

மேக்ரோன் மக்கள், ஊடகத்தினர் இருக்கும் கூட்டத்துக்குள் நடந்து சென்ற போது, முன்னாள் ஜனாதிபதி ஜாக்குவிஸ் சிராக் கூறியிருந்த, நான் மீண்டும் எனது விமானத்திற்கே செல்லவா? ( Do you want to take my plane?) என்ற வசனத்தை உச்சரித்து சிரித்துள்ளார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.

கடந்த 1996ம் ஆண்டு ஜெருசலம் சென்றிருந்த பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி ஜாக்குவிஸ் சிராக், மக்கள், பத்திரிகைக்காரர்கள், புகைப்படக்காரர்கள் என கூட்டத்தின் நடுவே சிக்கிக்கொண்டார்.

அப்போது ஜாக்குவிஸ் சிராக் கோபமாக, உங்களுக்கு என்ன வேண்டும்? நான் மீண்டும் எனது விமானத்திற்கே செல்லவா? (What do you want? Do you want to take my plane?) என கேட்டிருந்தார்.

இது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜாக்குவிஸ் சிராக்-ஐ போல் இம்மானுவேல் மேக்ரோன் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments