அரண்மனைக்கு குடிபெயர்ந்த பிரான்ஸ் ஜனாதிபதி: பிரமிக்க வைக்கும் வசதிகள்

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அவர் மனைவி பிரிஜ்ஜெட் ஆகிய இருவரும் ஜனாதிபதி வசிப்பதற்கான அதிகாரபூர்வ Elysée Palace-க்கு குடிபெயர்ந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்ற மேக்ரானும், அவர் மனைவி பிரிஜ்ஜெட்டும் இதுநாள் வரையில் பாரீஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தார்கள்.

இந்நிலையில் ஜனாதிபதிக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பு அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லாததால் அவர் தனது மனைவியுடன் Elysée Palace-க்கு தற்போது குடிபெயர்ந்துள்ளார்.

Elysée Palace என்பது பிரான்ஸ் ஜனாதிபதிகள் வசிப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடமாகும். இங்கு கடந்த 1848லிருந்து ஜனாதிபதியாக இருப்பவர்களே தங்குகின்றனர்.

அருமையான கலை அம்சங்களுடன் உருவாகியுள்ள Elysée Palaceயில் வெள்ளி மற்றும் தங்க நிறத்தில் சுவர் வண்ணங்கள், சோபா நாற்காலிகள் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கு வெள்ளை மாளிகை போன்று பிரான்ஸ்க்கு Elysée Palace-யாகும்.

மேக்ரான், தேர்தலின் போது கூறியது போல தனது மனைவியும், பிரான்ஸின் முதல் பெண்மணியுமான பிரிஜ்ஜெட்டுக்கு அரசு பொறுப்புகளை வழங்கவுள்ளார்.

இதற்காக அரண்மனையின் கீழ் தளத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments