பாரீஸில் மீண்டும் பயங்கரம்: 5 மில்லியன் யூரோ மதிப்புள்ள நகைகள் கொள்ளை

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் உள்ள நகை கடை ஒன்றில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் மூவர் 5 மில்லியன் யூரோ மதிப்புள்ள நகைகளை கொள்ளையிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் அமைந்துள்ள rue de la Paix என்ற நகை கடையில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று பிற்பகல் நேரத்தில் கடையின் முன்பாக வாடிக்கையாளர் தோற்றம் கொண்ட நபர் ஒருவர் நின்றுள்ளார்.

இந்நபரை பார்த்த காவலாளி கதவை திறந்து விட முயன்றபோது மறைந்திருந்த மற்ற இருவரும் திடீரென கடைக்குள் புகுந்துள்ளனர்.

உள்ளே நுழைந்ததும் துப்பாக்கி மற்றும் கோடாரியை காட்டி பிற வாடிக்கையாளர்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

பின்னர், கடை ஊழியர்களை மிரட்டிய மூவரும் கண்ணாடி கூண்டுகளை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை அள்ளி மூட்டியாக கட்டிக்கொண்டு காரில் தப்பியுள்ளனர்.

கொள்ளை சம்பவம் நிகழ்ந்தபோது கடையின் உரிமையாளர் மற்றும் அவருடைய பிள்ளைகள் இருவர் கடையிலேயே இருந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிசாரிடம் புகார் செய்யப்பட்டதும், கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கமெரா மூலம் ஆதாரங்களை திரட்டியுள்ளனர்.

கொள்ளைப்போன நகைகளின் மதிப்பு சுமார் 5 மில்லியன் யூரோ என உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.

பாரீஸ் மாநகரில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நிகழ்ந்து வருவதால் பொதுமக்களும் அந்நாட்டிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர்களும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments