ரசாயன தாக்குதல்: சிரியாவின் முகத்தை கிழித்தெறிந்த பிரான்ஸ்

Report Print Raju Raju in பிரான்ஸ்

சிரியா நடத்திய ரசாயன தாக்குதல் விடயத்தில் அந்நாட்டு ஜனாதிபதி கூறுவது அனைத்தும் பொய் என பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சர் Ayrault கூறியுள்ளார்.

சிரியா அரசு ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க விஷம் கலந்த ரசாயன தாக்குதலை நடத்தியதில் 54 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்த நிலையில், டிரம்ப் சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சிரியாவின் ஜனாதிபதி Bashar al-Assad நாங்கள் ரசாயன தாக்குதல் நடத்தியதாக சொல்வது 100 சதவீதம் பொய்.

கடந்த 2013ல் போட்ட ஒப்பந்தத்தின் படி எங்கள் ரசாயன ஆயுதங்களை நாங்கள் ஒப்படைத்து விட்டோம் என கூறியிருந்தார்.

இதற்கு தற்போது பதிலளித்துள்ள பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சர் Ayrault, சிரியா வெறுப்பு மனப்பான்மையில் ரசாயன தாக்குதலை நடத்தி விட்டு இப்போது பொய் சொல்கிறது.

இது போல யுத்தத்தை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments