பிரிட்டன் செல்லவிருந்த அகதிகள்..கொழுந்து விட்டு எரிந்த முகாம்: பிரான்சில் பயங்கரம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் அகதிகள் முகாம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதால் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

வடக்கு பிரான்சின் Dunkirk பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அகதிகள் தங்கியிருந்த அனைத்து கேபின்களும் தீ விபத்தில் சாம்பலாகின.

இந்த முகாமில் 1000 முதல் 1500 அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும், அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதலில் ஈடுபட்ட நபர்கள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு பிரிவினரும், ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் கொடூரமான முறையில் வன்முறையில் ஈடுபட்டதாகவும், கையில் கத்திகளை வைத்து ரகளையில் ஈடுபட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

அப்போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திடீரென நடந்த இந்த விபத்தால் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் உடனடியாக அங்கிருந்த நபர்களை வேறு இடங்களுக்கு மாற்றி உள்ளனர்.

தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் தீயை தீயனைப்பு படையினர் அணைத்து வருகின்றனர்.

இதில் தங்கவைப்பட்டிருந்த அகதிகள் சில பேர் பிரித்தானியா செல்லவிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments