மாணவர்களின் உயிரை காப்பாற்றிய ஆசிரியருக்கு உயரிய விருது

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவன் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டை தடுத்து நிறுத்திய ஆசிரியர் ஒருவருக்கு அந்நாட்டின் உயரிய விருது அளித்து கெளரவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸின் Alpes-Cote d'Azur மாகாணத்தில் Grasse என்ற பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியை சேர்ந்த மாணவன் ஒருவன் கடந்த மார்ச் 16-ம் திகதி கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் தலைமை ஆசிரியர் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

மேலும், கையில் குண்டு பாய்ந்த நிலையிலும் தாக்குதலை நடத்திய மாணவனை கட்டிப்பிடித்து பிற மாணவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படாதவாறு ஆசிரியர் காப்பாற்றியுள்ளார்.

பின்னர், மாணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் இன்று தான் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், மாணவர்களின் உயிரை காப்பாற்ற போராடிய Herve Pizzinat என்ற பெயருடைய அந்த ஆசிரியருக்கு நாட்டின் உயரிய Legion d'honneur என்ற விருது அளிக்கப்படும் என பிரான்ஸ் நாட்டின் கல்வி அமைச்சரான Najat Vallaud-Belkacem என்பவர் அறிவித்துள்ளார்.

இந்த விருதை மாகாணத்தலைவரான Christian Estrosi என்பவர் ஆசிரியருக்கு அளித்து கெளரவப்படுத்துவார் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வீரத்தீரச்செயல்களை புரிந்ததற்காக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியான நெப்போலியனால் கடந்த 1802-ம் ஆண்டு இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments