பாரீஸில் மீண்டும் பயங்கரம்: ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆபரணக் கண்காட்சி ஒன்றில் மர்ம நபர்கள் இருவர் நூதன முறையில் ரூ.3 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நேற்று முன் தினம் Paris Art Fair 2017 என்ற ஆபரணங்கள் மற்றும் புராதனக் கலைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றுள்ளது.

இந்தக் கண்காட்சியில் 20 நாடுகளில் இருந்து அரிய வகை கலைப் பொருட்கள் மற்றும் ஆபரண நகைகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், மாலை நேரத்தில் கண்காட்சி முடிவடைந்ததும் உரிமையாளர் ஒருவர் ஆபரணங்களை ஒரு பெட்டியில் வைத்து பூட்டும் வேலையில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

அப்போது, கடைக்கு வந்த இருவரில் ஒருவர் உரிமையாளர் முன்னிலையில் யூரோ தாள் ஒன்றை கீழே போட்டுள்ளார்.

பணம் கீழே கிடைப்பதை பார்த்த உரிமையாளர் அதனை எடுக்க முயன்றபோது மற்றொரு நபர் நகைகள் உள்ள பெட்டியை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார்.

கொள்ளைப்போன நகைகளின் மதிப்பு 2,00,000 யூரோ(3,23,38,950 இலங்கை ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

கண்காட்சியில் நகைகள் கொள்ளைப்போனது தொடர்பாக பொலிசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அமெரிக்க மொடலான கிம் கர்தஷியானின் மில்லியன் மதிப்பிலான நகைகள் கொள்ளைப்போனதை தொடர்ந்து தற்போது 3-வது முறையாக கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது பாரீஸ் மக்களியை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments