பிரான்ஸில் வினோதம்: கோழியுடன் உறவுக்கொண்ட நபருக்கு சிறை

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் கோழியுடன் உறவுக்கொண்ட நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேற்கு பிரான்ஸில் உள்ள Normandy நகரில் பெயர் வெளியிடப்படாத 59 வயதான நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வருகிறார்.

வீட்டில் அனைவரும் உள்ளபோது தந்தை மட்டும் அடிக்கடி வீட்டின் பின்புறத்திற்கு அடிக்கடி சென்று வருவது மகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஒரு நாள் தந்தையை பின் தொடர்ந்து கண்காணித்தபோது கோழியுடன் அவர் உறவு வைத்து சித்ரவதை செய்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை உடனடியாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், தாயார் இதனை நம்பவில்லை.

எனினும், மகள் கூறியவாறு மற்றொரு நாள் அவரை பின் தொடர்ந்து தாயும் மகளும் சென்றுள்ளனர்.

பின்னர், கோழியை பிடித்த அவர் அதனுடன் உடலுறவுக்கொள்ள தொடங்கியுள்ளார். இக்காட்சியை கண்ட தாயார் அதிர்ச்சியில் வாந்தி எடுத்துள்ளார்.

கணவன் என்றும் பாராமல் அவர் செய்த செயலைக் கண்டித்து தாயார் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

கோழியை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தக் குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று நீதிமன்றத்திற்கு வந்தபோது நபருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலாத்தில் அவரது வீட்டில் கோழி உள்ளிட்ட பிற வளர்ப்பு பிராணிகளை வளர்க்க கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments