பிரித்தானியா தாக்குதல் எதிரொலியால் Eiffel Towerக்கு ஏற்பட்ட மாற்றம்

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரித்தானியா நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்துக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக பாரீஸில் உள்ள ஈபிள் டவர் விளக்குகள் அணைக்கப்பட்டன.

பிரித்தானியாவின் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததுடன் 40 பேர் காயம் அடைந்தனர்.

இது தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கும் இதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் அமைந்துள்ள உலக புகழ்ப்பெற்ற சின்னமான ஈபிள் டவரின் விளக்குகள் நேற்று இரவு அணைக்கப்பட்டன.

இது குறித்து பாரீஸ் மேயர் Anne Hidalgo கூறுகையில், பாரீஸ்க்கும் லண்டனுக்கு எப்போது நல்லுறவு இருந்து வருகிறது.

இரு நகரங்களும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தில் இணைப்பாக பகிர்ந்து வருகிறது என கூறியுள்ளார்.

அதே போல இஸ்ரேலில் உள்ள Tel Aviv City Hallல் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரித்தானியா கொடி பிரம்மாண்ட திரையில் வைக்கப்பட்டிருந்தது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments