பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர் வீட்டில் திடீர் சோதனை! பின்னணி என்ன?

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கன்சர்வெடிவ் கட்சி வேட்பாளர் பிரான்சியஸ் பிலன் வீட்டில் பிரஞ்சு புலனாய்வாளர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாரிஸில் உள்ள பிரான்சியஸ் பிலன் வீட்டிலே சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிலன் மனைவிக்கு போலி வேலையுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், சோதனை குறித்து இதுவரை அதிகாரிகள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.

எந்த தவறும் நடக்கவில்லை என மறுத்துள்ள பிலன் கூறியதாவது, அழுத்தங்கள் அதிகரித்து வந்தாலும், ஜனாதிபதி வேட்பாளராக பேட்டியிடுவேன் என உறுதியளித்துள்ளார். பிரான்சில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறவுள்ள்து குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments