பெருகும் மக்கள் ஆதரவு: பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா நிற்பது உறுதி?

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமா வேட்பாளராக நிற்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் வலுவடைந்துள்ளது.

பிரான்ஸில் விரைவில் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி பதவிக்காக மட்டும் 12 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவெனில் பிரான்ஸ் மக்களில் பலர் வேட்பாளரை பற்றி தெரியாமல் திணறுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க குடிமகனும் முன்னாள் ஜனாதிபதியுமான பராக் ஒபாமா பிரான்ஸ் தேர்தலில் வேட்பாளராக நிற்கவேண்டும் என பிரான்ஸில் ஆதரவு பெருகி வருகிறது.

இதற்காக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 43000 பேர் இதில் கையெழுத்து போட்டுள்ளனர்.

வரும் 15ஆம் திகதிக்குள் 1 மில்லியன் கையெழுத்து பெறப்பட்டு அதை ஒபாமா பார்வைக்கு கொண்டு செல்ல அவர் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஒருவர் கூறுகையில், எங்கள் உரிமைகளுக்கு தயங்காமல் போராடக்கூடிய ஒருவர் தேவை.

மக்களை ஒன்றிணைக்கும் சக்தி கொண்ட ஒபாமாவை இதனால் தான் நாங்கள் ஆதரிக்கிறோம் என கூறியுள்ளார்.

இந்நிலையில் ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்து சுவரொட்டிகளும் பிரான்ஸில் ஒட்டப்பட்டு வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments