பிரான்ஸ் நாட்டில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து!

Report Print Raju Raju in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

மத்திய பிரான்ஸிலிருந்து பல பேரை ஏற்றி கொண்டு சுவிற்சர்லாந்து நோக்கி இன்று காலை நான்கு மணி அளவில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த அந்த பேருந்து குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ஐந்து சுற்றுலா பயணிகள் உயிரிழந்தார்கள். மேலும் 27க்கும் மேற்ப்பட்ட நபர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

சம்பவ இடத்துக்கு உடனே வந்த மீட்பு குழு காயமடைந்தவர்களை அருகிலிருக்கும் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

இதில் இருவரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதனிடையில், ஐரோப்பிய கண்டங்கள் முழுவதும் தற்போது குளிர் நிலவுவதால் சாலையில் கிடந்த ஐஸ் கட்டிகளில் மோதி பேருந்து ஓட்டுனர் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments