அகதிகளுக்கு உணவளித்த விவசாயிக்கு நேர்ந்த கதி: பிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் அகதிகளுக்கு உதவிய விவசாயிக்கு அதிரடி தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ்- இத்தாலி எல்லையில் அமைந்திருக்கும் Breil-sur-Roya கிராமத்தை சேர்ந்த Cedric Herro என்ற விவசாயிக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

விவசாயியான Cedric Herro, தன் நிலத்தில் பல நூறு அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உணவு அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சட்டவிரோதமாக நுழைந்த அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் Herrou கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நைஸ் நீதிமன்றம், Cedric Herroவுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 30,000 யூரோ (இலங்கை மதிப்பில் 47 லட்சம்) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது Cedric Herro ஆதரவாக 300 க்கும் மேற்ப்பட்டோர் நீதிமன்றம் முன் கூடினர்.

தீர்ப்புக்கு பின் பேசிய Cedric Herro கூறியதாவது, மக்களுக்கு உணவளிப்பது ஒரு விவசாயியின் கடமை. என் கடமையை தான் நான் செய்தேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments