நண்பரை சாவுக்கு விட்டுக்கொடுத்த 2 நபர்கள்: அதிர்ச்சி தரும் காரணம்!

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பாரிஸ் நகரில் மது போதையில் இருந்த நபர் ஒருவரை நண்பர்கள் இருவர் சத்தமாக குரட்டை எழுப்பியதாக கூறி கொட்டும் பனியில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

பாரிஸ் நகரின் வடபகுயில் அமைந்துள்ள Seine-Saint-Denis நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தின் போது நண்பர்கள் 5 பேர் ஒன்றாக இணைந்து மது அருந்திவிட்டு படுத்துறங்க சென்றுள்ளனர். இதில் உயிரிழந்த 35 வயது நபர் ஆழ்ந்த உறக்கத்தில் அதிக சத்தமாக குரட்டை எழுப்பியுள்ளார்.

இதில் அவரின் இரு நண்பர்களுக்கு அந்த குரட்டை சத்தம் எரிச்சலை வரவழைத்துள்ளது. இதனால் அந்த இருவரும் சேர்ந்து அந்த நபரை ஆடை மொத்தமும் உருவி விட்டு நிர்வாணமாக கொட்டும் பனியில் வெளியே படுக்க வைத்துள்ளனர்.

எஞ்சிய நண்பர்களைவிடவும் அதிக மது அருந்தி இருந்த குறித்த நபர், கொட்டும் பனியில் ஆழ்ந்த தூக்கத்தில் விழுந்தார். மட்டுமின்றி சுய நினைவை இழந்திருக்கலாம் என மருத்துவர்கள் பின்னர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே குறித்த நபரின் உடலை அடுத்த நாள் காலை கண்டெடுத்துள்ளனர். சம்பவம் நடந்த இரவு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக சரிந்திருந்தது.

இந்த நிலையில் நண்பரின் உயிரிழப்புக்கு காரணமான 28 வயது மற்றும் 35 வயது நபர்கள் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இருவரும் தற்போது வன்மத்தினால் நண்பரை படுகொலை செய்த குற்றத்திற்காக தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments