பொலிசார் உயிருக்கே பாதுகாப்பு இல்லை! பிரான்சில் பதற்றம்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் அரசை கண்டித்து பொலிசார் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் பாரிஸ், கலயிஸ், லில்லே, டவ்லாம் உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் 230-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.

இந்நிலையில், பிரான்சில் அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதலை கண்டித்தும், பொலிசாருக்கு உரிய பாதுகாப்பு கோரியும், தங்களை தற்காத்துக்கொள்ள நவீனரக ஆயுதங்கள் தேவை என அரசை வலியுறுத்தியும் பொலிசார் பலர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் விரைவில் பொலிஸ் பிரதிநிதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments