நைஸ் நகரில் துப்பாக்கி சூடு! பீதியடைந்த மக்கள்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சின் நைஸ் நகர வீதியல் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்தியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஜூலை 14 பாஸ்டில் நாள் தாக்குதலில் பலியானவர்களின் நினைவு தினத்திற்கு முன் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால் பரபரப்படைந்த Pasteur பகுதியில் உள்ள குடியிருப்பாளர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து பொலிசார் மர்ம நபர் குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இறுதியில், துப்பாக்கியுடன் இருந்த மர்ம நபரை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து, நள்ளிரவு வரை பொலிசாருக்கும் மர்ம நபருக்கும் இடையில் துப்பாக்கி சண்டை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இறுதியில் மர்ம நபரை கைது செய்த பொலிசார், மதுபோதையில் இருந்து அவனை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், தாக்குதலில் ஈடுபட்ட மரம் நபரின் உள்நோக்கம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments