அதிபருக்கு எதிராக பிரபல பாடகி போட்ட ட்விட்: வறுத்தெடுக்கும் இணை பயனர்கள்!

Report Print Basu in பிரான்ஸ்

உலகின் பிரபலமான பாடகர்களில் ஒருவரான ரிஹானா, ட்விட்டரில் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேவுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.

ரிஹானா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவின் மூலம் அவர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே பெற்றுள்ளார் என தெரியவருகிறது.

முன்னதாக, 28 வயதான நட்சத்திர பாடகர் ரிஹானா Education Can not Wait என்ற நிகழ்ச்சி குறித்து அதிபரை தொடர்பு கொண்டுள்ளார் என தெரிகிறது.

தற்போது, ரிஹானா வெளியிட்டுள்ள ட்விட்டரில் பதிவில், அதிபர் ஹோலண்டே என்னுடைய கடிதத்தை பார்த்தீர்களா? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். Education Can not Wait நிகழ்ச்சிக்கு உங்கள் தலைமை தேவை என குறிப்பிட்டுள்ளார்.

ரிஹானா பதிவிட்டுள்ள கேள்வி பிரஞ்சு இணைய பயனர்களிடையே ஆச்சரியத்தையும், சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பலர் இதை கலாய்க்கும் வண்ணம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments