பிரான்சில் அகதிகள் இப்படி தான் வாழ வேண்டும்!

Report Print Jubilee Jubilee in பிரான்ஸ்

பிரான்சில் குடியேறும் அகதிகள் பிரெஞ்சுக்காரர்களாக மாறி வாழ வேண்டும் என்று முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி கூறியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நிக்கோல்ஸ் சர்கோஸி கலந்து பேசினார்.

அப்போது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தான் வெற்றி பெற்றால் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையாக போரிடுவேன் என்றார்.

மேலும், பிரான்ஸ் முழுவதும் ஒரே சமுதாயம் என்று கூறிய அவர் சிறுபான்மையினரின் கொடுங்கோன்மை அகல வேண்டும் என்று தெரிவித்தார்.

அதேபோல் பிரான்ஸில் குடியேறுபவர்கள் பிரெஞ்சுக்காரர்களாக முழுவதும் வாழ வேண்டும். இதன் மூலம் வரலாற்றையும் முன்னோர்களையும் கலாசாரத்தையும் முற்றிலும் ஏற்பதாக அவர்கள் கூற வேண்டும் என பேசினார்.

மேலும், ஆண்கள் நீச்சல் உடை அணியலாம், பெண்கள் அணியக் கூடாது போன்ற இடைக்கால தடையை நான் எப்போதும் ஏற்க மாட்டேன் என தெரிவித்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments