பிரான்ஸை கதிகலங்க வைத்த இளைஞர்களில் ஒருவன் சிக்கினான்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் தவறான தீவிரவாத எச்சரிக்கை விடுத்து மக்களை கதிகலங்க வைத்த 16 வயது இளைஞர் ஒருவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Marne பகுதியில் வைத்து குறித்த இளைஞரை கைது செய்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு இளைஞரை தீவரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை பொலிசாருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், Halles மாவட்டத்தில் அமைந்துள்ள செயின்ட் லியூ தேவாலயத்தில் தீவரவாதிகள் புகுந்து மக்களை பணயக்கைதிகளாக பிடித்து வைக்க கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து,சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் அப்பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்றி தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்தி சமூக வலைத்தளம் மூலம் பரவி நாட்டையே கதிகலங்க வைத்துள்ளது. பின்னர், தடுப்பு நடவடிக்கைகள் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், obs தனது வலைத்தளத்தில் இரண்டு இளைஞர்களுடன் நடத்திய பேட்டியை வெளியிட்டுள்ளனர். அதில், நாங்கள் தான் இந்த எச்சரிக்கை அழைப்பை விடுத்தோம் என இளைஞர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்த, நடத்திய விசாரணையில் 16 வயதுடைய ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும், 17 வயதுடைய மற்றொரு நபரை தேடி வருவதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments