வெடிகுண்டு புரளி கிளப்பிய வாலிபர்கள்: பொலிசாரிடம் கூறிய வினோத விளக்கம்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் வெடிகுண்டு புரளி கிளப்பிய வாலிபர்கள் இருவர் பொலிசாரிடம் அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள தேவாலயம் ஒன்றில் தீவிரவாதிகள் பலரை பிணையக்கைதியாக வைத்துள்ளதாக கடந்த சனிக்கிழமை பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற பொலிசார் ஆயுதங்களுடன் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். மேலும், அங்குள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பொதுமக்கள் கலைந்து செல்லுமாறு உத்தரவிடப்பட்டது.

சில மணி நேரத்திற்கு பிறகு அது ஒரு புரளி என பொலிசாருக்கு தெரியவந்ததும், தவறான தகவல் அளித்தவர்களை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் பொலிசாருக்கு தவறான தகவல் அளித்ததாக சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இரண்டு வாலிபர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

அதில், பொதுமக்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்காக புரளியை கிளப்பியதாகவும், இதற்கு பொதுமக்கள் அச்சமடைந்ததற்கு நாங்கள் பொறுபேற்க முடியாது என விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், ஒரு புரளிக்கு பொலிசார் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என அந்த வாலிபர்கள் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளனர்.

மத்திய பாரீஸ் நகரை பரபரப்புக்கு உள்ளாக்கிய வாலிபர்கள் இருவர் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் என கூறப்படுகிறது.

மேலும் பொலிசாருக்கு தவறான தகவல் அளித்த குற்றத்திற்காக வாலிபர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 30,000 யூரோ அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments