புர்க்கினியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்: பொதுமக்கள் அதிருப்தி

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் புர்க்கினி தடையை எதிர்த்து அவுஸ்திரேலிய இளம் பெண் ஒருவர் போராட்டத்த்கில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் குடியிருந்து வருபவர் 23 வயதான Zeynab Alshelh. பிரான்சில் இஸ்லாமியர்களின் பாரம்பரிய உடையை பொது இடங்களில் உடுத்திச் செல்வதற்கு கடும் எதிர்ப்பு கிளிம்பியுள்ளதில் இவருக்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு பிரான்ஸ் வந்த செய்னாப் மற்றும் அவரது குடும்பம் Riviera கடற்கரையில் புர்க்கினி அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மட்டுமின்றி புர்க்கினி குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் எனில் என்னிடம் அணுகுங்கள் என்ற தட்டியையும் ஏந்தியபடி தமது எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளனர்.

ஆனால் அங்கிருந்த பொதுமக்களுக்கு இவர்களின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தவே அவர்கள் இவருடன் வாதிட துவங்கியுள்ளனர்.

இதில் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு மிரட்டல் விடுக்கவே இவர்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதத்திற்கும் புர்க்கினிக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை எனவும் அதுபோலவே பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று செய்னாப் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments