பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் கீழ் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் கீழ் இளம்பெண் ஒருவரை 3 புலம்பெயர்ந்தவர்கள் கொடூரமாக கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸ் நகரில் பெயர் வெளியிடப்படாத 19 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார்.

சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் 17 வயதான அல்ஜீரியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவருடன் இளம்பெண் பழகியுள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் கீழ் சந்திக்கலாம் என அந்த வாலிபர் பெண்ணை அழைத்துள்ளார்.

நடக்கவிருக்கும் விபரீதத்தை அறியாமல் அவரும் வாலிபர் அழைத்த இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, வாலிபர் மற்றும் மறைந்திருந்த மற்ற இருவர் என மூவரும் சேர்ந்து அப்பெண்ணை கட்டி தூக்கிச்சென்றுள்ளனர்.

ஈபுள் கோபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு புதரில் அவர்கள் ஏற்கனவே போர்வை போன்ற ஒரு ஆடையை தயாராக வைத்துள்ளனர்.

பின்னர், பெண்ணின் வாயை துணியால் கட்டிய அவர்கள் மூவரும் கூட்டாக அப்பெண்ணை கற்பழித்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு பெண் மயக்கமாகியுள்ளார். மறுநாள் அதிகாலையில் நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கற்பழிப்பு தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார் பாரீஸில் உள்ள 18 வது வட்டத்தில் மூவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், மூவரும் ஜேர்மனி நாட்டிற்கு தப்புவதற்கு தயாராக இருந்ததும், அவர்கள் மூவரிடமும் சட்டப்பூர்வமான ஆவணங்கள் எதுவும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

மூவரையும் சிறையில் அடைத்துள்ள பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments