பிரான்ஸ், அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஜெனீவா ரிப்போர்ட்!

Report Print Basu in பிரான்ஸ்

பூமியில் மின்னல் நிகழ்த்திய இரண்டு உலக சாதனைகளை ஜெனீவாவில் உள்ள உலக வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.

அதில், 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி பிரான்சின் தென்கிழக்குப் பகுதியை 7.74 நொடிகள் தாக்கிய மின்னல் உலகத்திலேயே அதிகநேரம் நீடித்த மின்னலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு யூன் மாதம் 20ம் திகதி அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரத்தில் சுமார் 321 கிலோ மீற்றர் தூரத்திற்கு தாக்கிய மின்னல் மிக நீண்ட தூரத்திற்கு தாக்கிய மின்னலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அபாயகரமான வானிலையால் ஒவ்வொரு ஆண்டும் பலர் பாதிப்பிற்குள்ளாவதாக உலக வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைமை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மின்னலில் இருந்து உயிர்களைக் காப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், இதன் உதவியால் பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்க முடியும் என உலக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments