படுக்கையில் சடலமாக கிடந்த 5 மாத குழந்தை: தாயார் கொலை செய்தாரா?

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் 5 மாத குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக அக்குழந்தையின் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த தம்பதி இருவர் தங்களது 3 வயது மற்றும் 5 மாத குழந்தையுடன் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

Bayonne நகரில் உள்ள Saint-Pee-sur-Nivelle என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் நால்வரும் வாடகைக்கு தங்கியுள்ளனர்.

சுற்றுலா பயணம் நேற்றுடன் முடிவடைவதால் பிரித்தானியா நாட்டிற்கு திரும்ப அனைவரும் தயார் ஆகியுள்ளனர்.

நேற்று இரவு நேரத்தில் கணவன் அதிகாலையில் எழுந்துள்ளார். ஆனால், அவரது மனைவி 9 மணி வரை தூங்கிவிட்டு அதன் பின்னர் எழுந்துள்ளார்.

இந்நிலையில், தாயார் அருகில் படுத்திருந்த 5 மாத குழந்தை திடீரென உயிரிழந்து இருப்பதை கண்ட கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக அவர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்ற பொலிசார் அறையை நன்கு சோதனை செய்துள்ளனர்.

பின்னர், உயிரிழந்த தாயார் மீது பொலிசாருக்கு மிகுந்த சந்தேகம் எழுந்ததால் அவரை உடனடியாக கைது செய்தனர்.

மேலும், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால் அதன் முடிவுகள் வெளியான பிறகு குழந்தையின் மரணத்தின் பின்னால் உள்ள மர்மம் விலகும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments