பிரான்ஸை பதற வைத்த மொராக்கோ செய்தித்தாள்!

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸின் மெட்ஸ் நகரை சார்ந்த இரண்டு மொராக்கியர்கள், நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மொரக்கோ செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து சந்தேகிக்கப்பட்ட இரண்டு மொராக்கியர்கள் விசாரணைக்கு பின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆனால் பிரஞ்சு அதிகாரிகள் மொராக்கோ செய்திதாள் வெளியிட்ட தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளனர்.

பிரான்ஸில் இரண்டு மொராக்கோ மாணவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மொராக்கோ உள்துறை அமைச்சர் கூறிய கருத்தை பாரிஸ் பயங்கரவாத தடுப்பு வழக்கறிஞர் முறையாக மறுத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மாணவர்கள் குடியிருப்பில் நடந்த சோதனையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

அதனால் தான் அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஆதாரம் கிடைத்திருந்தால் அவர்கள் பிரான்ஸில் நீண்டகால விசாரணையை சந்தித்து இருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments