யூதர் ஒருவரை கத்தியால் தாக்கிய மர்ம நபர்: பிரான்சில் தொடரும் அச்சுறுத்தல்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
305Shares

பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க் பகுதியில் யூதர் ஒருவரை மர்ம நபர் கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.

ஸ்ட்ராஸ்பேர்க் பகுதியில் இருந்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு நடந்து வந்துள்ளார் 62 வயதான Chalom Levy. திடீரென்று இவரை வழி மறித்த நபர் ஒருவர் தாம் வைத்திருந்த கத்தியால் இவரை கொலை செய்யும் வகையில் தாக்கியுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த லீவி, கொலைகாரனிடம் இருந்து தப்பிக்க கூச்சலிட்டு கொண்டே அடுத்துள்ள பார் ஒன்றுக்குள் புகுந்துள்ளார்.

இதனையடுத்து அங்குள்ள ஊழியர்கள் பொலிசாருக்கும் அவசர சேவை பிரிவினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உரிய நேரத்தில் அவருக்கு அந்த விடுதிக்குள் நுழையும் யோசனை வந்ததால் மட்டுமே அவர் தற்போது உயிருடன் இருப்பதாக பாதிக்கப்பட்டவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட நபர் யூதர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய உடையான கிப்பா அணிந்திருந்ததால் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

நடந்த இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டவரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், கடந்த 2010 ஆம் ஆண்டு இதுபோலவே யூதர் ஒருவரை தாக்கிய சம்பவமும் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி சமீபத்தில் தான் அந்த நபர் மனநல மருத்துவமனையில் இருந்து வெளி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முற்றிலும் குணமாகாத ஒருவரை அந்த மருத்துவமனை ஏன் வெளியேற்றியுள்ளது என்பதை தெளிவு படுத்த வேண்டும் என லீவியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக எந்த முகாந்திரமும் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி இதுவரை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று எந்த குழுவினரும் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் தொடர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக பொதுமக்களிடையே கடும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments