70 கோடி மதிப்புள்ள கைகடிகாரத்தை பறிகொடுத்த இளவரசி

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
1034Shares

பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளவரசி தனது விலை உயர்ந்த கைகடிகாரத்தை பறிகொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டுக்கு, சவுதி நாட்டு இளவரசி சுற்றுலா சென்றுள்ளார். அப்போது பாரிஸின் மத்திய பகுதியில் ஆயுதமேந்திய மர்ப நபர்கள் சிலர் வழி மறித்து, அவரிடம் கொள்ளையிட முயற்சித்துள்ளனர். அப்போது அவரிடம் கைகடிகாரம் மட்டுமே இருந்துள்ளது. வந்த மர்ம நபர்கள் அந்த கைகடிகாரத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கொள்ளை போன கைடிகாரத்தின் மதிப்பு 11 லட்சம் டொலர் (சுமார் 70 கோடி ரூபாய்) என கூறப்படுகிறது.

இது குறித்து இளவரசி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும், அது பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சவுதி நாட்டு இளவரசியிடம் கொள்ளையடித்த சம்பவம், அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments