பிரான்ஸ் மதுபான விடுதியில் தீ விபத்து - 13 பேர் பலி

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
577Shares

பிரான்ஸ் நாட்டில் மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் 13 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் பிரிட்டனி மாகாணத்துடைய தலைநகரான ரென்னெஸ் நகரின் ரோவென் பகுதியில் உள்ள பிரபல மதுபான விடுதியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் பிரான்ஸ் நாட்டின் உள்துறை மந்திரி பெர்னார்ட் காஸேனியூவே தெரிவித்துள்ளார்.

மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments