இறக்கவும் தயாராக இருந்தேன்! நைஸ் ஸ்கூட்டர் ஹீரோ மெய்சிலிர்க்கும் பேட்டி

Report Print Basu in பிரான்ஸ்
781Shares

நைஸ் தாக்குதலின் போது கனரக வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற நபர் முதன் முறையாக Nice Matin பத்திரிகைக்கு மெய்சிலிர்க்கும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

நைஸ் விமான நிலையத்தில் பணிபுரியும் பிராங்க் என அழைக்கப்படும் குறிப்பிட்ட நபர், கடந்த 14ம் திகதி தாக்குதல் இடம்பெறும் போது, கனரக வாகனத்தை தடுக்க முயன்றார்.

தன் உயிரை பணயம் வைத்து வாகனத்தை தடுக்க முற்பட்டார். காணொளி ஒன்றில் பதிவான இந்த காட்சி பரபரப்பாக பேசப்பட்டு வைரல் ஆனது. சமூக வலைத்தளங்களில் ஸ்கூட்டர் ஹீரோ என வர்ணிக்கப்பட்டார் பிராங்க்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, சம்பவத்தன்று நானும் என் மனைவியும் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது பலத்த அளவின் கூக்குரல் கேட்க, என் மனைவி நிறுத்துங்கள் ஏதோ பிரச்சனை என கூறினார்.

அதன் பின்னர் தான் உடல்கள் சிதறிவிழும் கோர காட்சிகளை கண்டேன். நிலைமையை உடனடியாக புரிந்துகொண்ட நான், எதாவது செய்யவேண்டும் என முடிவெடுத்து, வாகனத்தை தடுத்து நிறுத்த முற்பட்டேன்.

என்ன ஆபத்து நிகழ்ந்தாலும் பரவாயில்லை என வாகனத்தை நிறுத்த முயன்றேன். பின்னர் வாகனத்தின் அருகில் சென்றதும் தான் ஒரு ஸ்கூட்டரை வைத்து என்ன செய்ய முடியும் என நினைத்த, என் ஸ்கூட்டரை வாகனத்தை நோக்கி தள்ளினேன்.

பின்னர், வாகனத்தின் மீது ஏறி ஓட்டுநரை தாக்கினேன், அவன் துப்பாக்கியை எடுத்து என்னை தலையில் சுட முயற்சித்தான். ஆனால் துப்பாக்கி வேலை செய்யவில்லை, பின்னர் அவன் துப்பாக்கியால் எனது தலையில் தாக்க நான் சாலையில் விழுந்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments