"ஒரு நாள் என்னை பற்றி அறிவீர்கள்" : நைஸ் நகர தாக்குதல் குற்றவாளி அனுப்பிய குறுஞ்செய்தி

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்
1929Shares

நைஸ் நகர தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக சிலருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

84 பேரை பலி கொண்ட இந்த தாக்குதலை நடத்திய Mohamed Lahouaiej Bouhlel என்ற நபர் துனிசியா நாட்டை சேர்ந்தவர் ஆவார், இவர் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் தனது சகோதரனுக்கு செல்பி புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

அதில், பிரான்சில் உள்ள கடற்கரையோரம், வாய் நிறைய சிரிப்புடன் நின்றுகொண்டு செல்பி எடுத்த புகைப்படத்தை அனுப்பியுள்ளார். மேலும் மற்றொரு இரண்டு நபர்களுக்கு, நிறைய ஆயுதங்கள் கொண்டு வாருங்கள்.....இது நல்லது, என்னிடமும் உபரகணங்கள் உள்ளன என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

தற்போது இந்த இரண்டு நபர்களையும் பொலிசார், காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 200 பொலிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Mohamed Lahouaiej Bouhlel குறித்து இவனது வீட்டிற்கு அருகில் வசித்த நபர் கூறியதாவது, நான் பயனற்றவன், ஆனால் ஒரு நாள் என்னைப்பற்றி உங்களுக்கு தெரியவரும் என கூறியுள்ளான், மேலும் ஆல்கஹால், மாட்டிறைச்சி, போதை மருந்து போன்றவற்றிற்கு அடிமையான இவனுக்கு தான் என்ன செய்யப்போகிறோம் என்பதை தெளிவாக அறிந்துதான் செய்துள்ளான் என கூறியுள்ளார்.

இதுபோன்ற பாதகச்செயலில் ஈடுபட்ட Bouhlel, தன்னைத்தானே தீவிரப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் அல்லது யாரேனும் ஒருவரால் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்க கூடும், மேலும் தான் ஒரு இஸ்லாமியராக இருந்தபோதும் ஒரு நாள் கூட மசூதிக்கு சென்று தொழுகை செய்தது கிடையாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments