பிரான்ஸ் ஜனாதிபதியின் முடி திருத்துபவருக்கு மாத ஊதியம் என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
பிரான்ஸ் ஜனாதிபதியின் முடி திருத்துபவருக்கு மாத ஊதியம் என்ன தெரியுமா?
1363Shares

பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் தனிப்பட்ட முடிதிருத்துபவரின் மாத ஊதியம் ரூ.7.5 லட்சம் என தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி பெற்றுக்கொள்ளும் ஊதியத்திற்கு நிகராக அவரது தனிப்பட்ட முடி திருத்துபவரும் ஊதியம் பெற்று வந்துள்ளது பிரான்ஸ் மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.

ஒலிவியே பி என்ற பெயரில் அறியப்படும் அந்த நபருக்கு மாத ஊதியத்திற்கு புறமே வீட்டுக்கான உதவித்தொகை, குடும்பத்தினருக்கு சிறப்பு சலுகைகள் என அரசிடம் இருந்து பெற்று வந்துள்ளார்.

மட்டுமின்றி பிரான்கோயிஸ் ஹோலண்டே ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் தமது ஊதியத்தில் 30 விழுக்காடு குறைத்துக்கொள்வதாக அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் தமது முடி திருத்துபவரை விடவும் ஜனாதிபதி ஹோலண்டே ரூ.3.7 லட்சம் மட்டுமே மாதந்தோறும் அதிகமாக பெற்றுக்கொள்கிறார்.

பிரான்ஸ் நாட்டை பொறுத்தமட்டில் தனியொரு நபருக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வுகளின்படி சராசரி மாத ஊதியமென்பது ரூ.1.93 லட்சம் என கூறப்படுகிறது.

ஒலிவியே பி எனப்படும் அந்த நபர் ஜனாதிபதி ஹோலண்டே உடன் பல வெளிநாட்டு பயணங்களிலும் உடன் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி அவருடனான ஒப்பந்த நகல்களில் அனைத்து விடயங்களும் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒலிவியே பி என்பவருக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் அவரது ஊதிய விவகாரத்தை நியாயப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியான தகவலின்படி, ஒலிவியே பி தினசரி அதிகாலையில் இருந்தே தமது பணியை துவங்குவார் எனவும், தினமும் ஜனாதிபதிக்கு முடி திருத்துவார் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் பிரான்ஸ் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments