பழைய வாகனங்களுக்கு தடை விதித்த பாரிஸ்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
பழைய வாகனங்களுக்கு தடை விதித்த பாரிஸ்

காற்று மாசுபடுதலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக 1997 ஆம் ஆண்டிற்கு முன்பு வெளிவந்த அனைத்து வாகனங்களுக்கும் பாரிஸ் நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவினால் சுமார் 5 லட்சம் வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது.

1997 ஜனவரி 1 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் திங்கள் முதல் வெள்ளி வரை சாலையில் வலம் வர முடியாது. இது மொத்த வாகனங்களில் 10 விழுக்காடு என கூறப்படுகிறது.

இந்த தடை உத்தரவு இனி வரும் காலங்களில் மேலும் கடுமையாக்கப்படலாம் எனவும் அது 2020 ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக பாரிஸ் சாலைகளில் நின்று அகற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி பாரிசின் மத்திய பகுதியில் 2011 ஆம் ஆண்டிற்கு பின்னர் பதிவு செய்துள்ள வாகனங்களை மட்டுமே வாடகைக்கு அமர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இருச்சக்கர வாகனங்கள் 2015 ஜூலை மாதத்திற்கு பின்னர் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வாகன புகை காரணமாக பிரான்ஸ் நாட்டில் ஆண்டுக்கு 48,000 மக்கள் உயிரிழப்பதாகவும், உலக அளவில் 30 லட்சத்து 70 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் பிரான்ஸ் பொது சுகாதார அமைப்பு கூறுகின்றது.

வாகன புகை காரணமாக ஆண்டுக்கு 84 பில்லியன் பவுண்டு அரசுக்கு செலவாவதாக கூறப்படுகிறது.

அரசு வெளியிட்டிருக்கும் இந்த வாகன தடையை மீறும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது 32 பவுண்டுகள் அபராதமாக விதிக்க உள்ளதாகவும் இது படிப்படியாக உயர்த்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே இந்த தடை உத்தரவிற்கு வாகன ஓட்டிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தங்களது வாகனங்களை தேசிய சட்டமன்றம் மற்றும் Champs-Elysees அருகாமைகளில் நிறுத்தும் போராட்டத்திற்கு வாகன ஓட்டிகள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments