படுகொலை செய்யப்பட்ட ஈழத்து தமிழ் ஊடகவியலாளர்களை நினைவு கூரும் நிகழ்வு பிரான்ஸில்

Report Print Kalaiyarasi Kalaiyarasi in பிரான்ஸ்

இலங்கைத்தீவில் இடம்பெற்ற உண்மைத்தன்மைகளை உலகறிய செய்வதற்கு ஊடகத்துறையில் இரவு பகலாக உழைத்து படுகொலை செய்யப்பட்ட ஈழத்து தமிழ் ஊடகவியலாளர்களை நினைவு கூரும் நிகழ்வும், கருத்தரங்கும் பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.

லண்டனை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்களின் கைதுகள், படுகொலைகள், சித்திரவதைகள் மற்றும் இன்றைய தமிழ் தேசிய அரசியலும், தமிழ் ஊடகவியலாளர்களும் என்ற தொனிப்பொருளில் சிறப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் (தராக்கி) அவர்களின் ஆவணப்பட வெளியீடு இடம்பெற்றதுடன், பத்திரிகையொன்றின் ஆசிரியராக சேவையாற்றிய ஞானசுந்தரம் குகநாதனின் ஊடக சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers